கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற மரபை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். 1983-இல் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் , ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது.
பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் (Hung Assembly) ஆளுநர் கீழ்க்கண்ட வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் .
1.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி (Pre-poll Alliance): தேர்தலில் போட்டியிடும்போதே கூட்டணி அமைத்து, அதிக இடங்களைப் பெற்று, அந்த கூட்டணியின் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், ஆளுநர் அவரை அழைக்க வேண்டும்.

2.தனிப்பெரும் கட்சி (Single Largest Party): தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால், அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கலாம்.
3.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition – Type 1): தேர்தலுக்குப் பிறகு, கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அவர்களை அழைக்கலாம்.