Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான் | Pakistan Turkey Qatar and Indonesia enter into a new agreement India watching closely

Spread the love

International

oi-Mani Singh S

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மெக்கா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களில் மற்றொரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்தோனேஷியா, கத்தார், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்து புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தின. இந்த ஒப்பந்தத்தின் படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் இதர இரண்டு நாடுகளும் இணைந்து அந்த நாட்டிற்கு உறுதுணையாக நிற்கும்.

Pakistan Turkey Qatar and Indonesia

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த

எடுத்துக்காடடாக நேட்டோ கூட்டமைப்பு எப்படி செயல்படுகிறதோ அதேபோல, இஸ்லாமிய நாடுகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மெக்கா ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக பாகிஸ்தான், துருக்கி சவுதி அரேபியா தெரிவித்தது. அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பலம் கொண்ட சவுதி அரேபியா, வலிமையான ராணுவத்தை கொண்ட துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் சர்வதேச நாடுகள் மத்தியில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் போட்ட ஓரிரு மாதங்களில் மற்றுமொரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான், துருக்கி, கத்தார், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்புத்திறனை வலுப்படுத்தும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்து

கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. பதர் (Badr) ஒப்பந்தம் என்று இது அறியப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப், துருக்கி பாதுகாப்புத்த்துறை அமைச்சர் யாசர் குல்கர், கத்தாரின் துணைப் பிரதமரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் சவுத் பின் அப்துல் ரஹ்மான் மற்றும் இந்தோனேசியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் யூசுப் ஜௌஹாரி ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டனர். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கி.பி. 624 ஆம் ஆண்டு நடைபெற்ற பதர் போரை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாமிய வரலாற்றின் தொடக்ககாலப் போர்களில் ஒன்றாக பதர் போர் கருதப்படுகிறது. இந்தப் போரில், நபிகள் நாயகம் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிரிகளைத் வீழ்த்தியிருந்தனர். தற்போது பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்திற்கு 624 ஆம் ஆண்டு போரை நினைவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டு இருக்கும் பெயரும் கவனம் பெற்றுள்ளது.

4 நாடுகளும் ஒன்றுக்கொன்று துணையாக

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 4 நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பத்ர் என்றால் முழு நிலவு என்று பொருள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பங்கேற்கும் நான்கு நாடுகளும் ஒன்றுக்கொன்று துணையாக செயல்படும். இந்த ஒப்பந்தம் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் போர் 8 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஹவுதி கிளர்ச்சி குழு – சவுதி மோதலும் அதிகரித்துள்ளது. இதனால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக உள்ள பாகிஸ்தான், நமது நாட்டுடன் எலியும் பூனையும் போல உள்ளது. இத்தகைய சூழலில், சமீப காலமாக பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனது தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறது. தற்போது பாகிஸ்தான், சீனாவையே தனது ஆயுத தேவைக்கு நம்பியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கூட சீன ஆயுதங்கள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

தற்போது, போடப்பட்டுள்ள பதர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் தனது ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கான ஆதாரங்களைப் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய ஒத்துழைப்பு, தனது ஆயுதப் படைகளை நவீனமயமாக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தவும் பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வலுவாக வாய்ப்புள்ளது. எனவே, இதனை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *