“தவெக `இதுல எப்படிணே எரியும்?’ என்பதை போல பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர்”- எடப்பாடி பழனிசாமி| “TVK is smashing up various pieces of furniture'” – Edappadi Palaniswami

Spread the love

இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட Late ஆகும் என்பதாலோ என்னமோ, Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர். கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”! ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *