தவெக: “இந்த பயணத்தில் எனக்கு இருந்த கஷ்டங்கள், அவமானங்கள்” – முதல்வர் ஜோசப் விஜய் முதல் பேச்சு | TVK: “The hardships and humiliations I faced on this journey” — Chief Joseph Vijay’s maiden speech.

Spread the love

100 சதவிகிதம் என்னை நம்பலாம்!

மேலும் விஜய், “மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான். யாரையும் தப்பு செய்யவும் விடமாட்டான். யாருக்காவது தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இப்போதே அதை அழித்துவிடுங்கள்.

இங்கு ஒரே பவர் சென்டர் நான் தான். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், உழைப்பாளர்கள், மீனவர்கள் என எல்லாத்தரப்பும் சிறப்பாக இருப்போம். சிறுபான்மையின மக்களே உங்களுடன் எப்போதும் தவெக இருக்கும். அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். 100 சதவிகிதம் என்னை நம்பலாம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் நம் அடிப்படை கோட்பாடு. இந்த சூழலில் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக குட்டி, நண்பா, நண்பீஸ்க்கு நன்றி. அவர்களால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் வைத்து, எல்லாவற்றையும் இந்த விஜய் மாமா செய்துகொடுப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்.

தமிழக வெற்றிக்கழக தோழர்களே… வாக்கு சாவடி முகவர்கள், நிர்வாகிகள் என எல்லோருக்கும் நன்றி. இது புதிய தொடக்கம். மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட இந்த அரசுக்கு ஆதரவை வழங்கிய என் சகோதரர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை, என் நண்பர் பிரவின் சக்ரவர்த்தி, சிபிஐ எம் தேசியப் பொதுச் செயலாளர் பேபி, மாநிலச் செயலாளர் சண்முகம், கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், வன்னி அரசு, சிபிஐ கட்சி தோழர் டி.ராஜா. வீரப்பாண்டியன், முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் காதர் மொய்தீன், நவாஸ் கனி ஆகியோரை வரவேற்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சந்திக்கும் வரை இல்லை…. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.” என்று முடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *