தவெக எம்எல்ஏ மீது புகார்.. ஏன் விஜய் மறுப்பு தெரிவிக்க வேண்டியது தானே.. தெளிவாக கேட்ட டிடிவி தினகரன் | TTV Dhinakaran Says CM Vijay or Chief Secretary Should Have Issued a Denial Over Allegations Against TVK MLA Arul Vignesh

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

செங்கல்பட்டு: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து முதல்வர் விஜய் அல்லது தலைமைச் செயலாளர் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடி தினகரன் விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேறு வக்காலத்து வாங்குகிறார் என்றும் சாடியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்ட புகாரை, ஆட்சியர் பத்மஜா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TTV Dhinakaran

தவெக தரப்பிலும், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் முதல்வர் விஜய், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா ஆகியோர் மவுனம் காத்து வருகின்றனர். இதனால் தவெகவினரும் கூட முதல்வர் விஜய், அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், தவெகவுக்கு எதிராக பேசிவோர் மீது, அவர்கள் உண்மையை பேசினாலும் கூட கைது செய்வார்கள். காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறாக பேசினாலே, கைது செய்வேன் என்றார் விஜய்.

ஆனால் பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசமாக மெசேஜ் அனுப்பி இருக்கிறார் தவெக எம்எல்ஏ.. இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதாகவே எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி உண்மை இருக்கும் பட்சத்தில் விஜய் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவேளை சம்பவம் நடக்கவில்லை என்றால், விஜய் அல்லது தலைமைச் செயலாளர் தரப்பில் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

இதனிடையே தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வேறு வக்காலத்து வாங்குகிறார். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து மனதில் நிற்கும் வகையில் ஏதாவது ஒரு திட்டத்தை கொடுத்துள்ளார்களா? தங்க மோதிரம் திட்டம் ஏதோ சினிமாவில் விளம்பரத்திற்கு செய்வது போன்ற திட்டம்.. அரசு மருத்துவமனைகள் கடந்த ஆட்சியில் மோசமாக இருந்ததாக கூறினார்கள்.

அந்த பணத்தை வைத்து அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தலாம்.. குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு தேவையான விஷயங்களை செய்யலாம். வெறும் விளம்பரம் தான். தவெக ஆட்சியின் அவலங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதெல்லாம் வெற்று விளம்பர திட்டங்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *