தவெக கூட்டணி அறிவிப்புக்கு அடுத்த நாளே விஜய்யை சந்தித்த திருமா!|After VCK-TVK Alliance, Thirumavalavan Meets Vijay

Spread the love

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை’ நடத்தியது.

இதில் முதன்முறையாகத் தவெகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

இதையடுத்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தார் திருமாவளவன்.

இந்தச் சந்திப்பு ஏன் என்பது குறித்த திருமாவளவனின் அறிக்கை…

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்
X

நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.

100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்தியிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். நன்றி தெரிவித்தோம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தித் தீர்மானம் கொண்டுவந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *