தவெக முதல் பட்ஜெட்டுக்கு ‘பூஜ்யம்’ மதிப்பெண்: அதிமுக பொதுச்செயலாளர் விமர்சனம்|AIADMK Rips Apart TVK Budget, Calls It All Empty Promises

Spread the love

வருவாயே இல்லாத காலத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 11 மாதங்கள் ரேஷன் கடைகளில் விலையில்லா உணவுப் பொருள்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 நிதியுதவி வழங்கினோம்.

கொரோனா கால மருத்துவக் கட்டமைப்புகளைச் சீரமைத்தோம், பொங்கல் பரிசுகளை வழங்கினோம்.

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 27 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 4 வேளாண்மைக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம்.

6 புதிய மாவட்டங்களை உருவாக்கினோம். சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள் என அனைத்தையும் அதிமுக ஆட்சியில்தான் செய்தோம். புயல் மற்றும் வறட்சிக் காலங்களில் தகுந்த நிவாரணங்களை வழங்கினோம்.

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான்.

விவசாயிகளின் நலனுக்காகச் சுமார் 18,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தோம். ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *