தவெக வெற்றிக்கு விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து|Rahul Gandhi’s Call to Vijay Sparks Alliance Speculation

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

ஆனால், ஆட்சி அமைப்பதற்கான தொகுதிகளின் எண்ணிக்கை தவெக-விடம் இல்லை. இப்போது தவெக எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது…

“திரு. விஜய் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த பிரமாண்ட வெற்றிக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

ராகுல் காந்தி பதிவு

ராகுல் காந்தி பதிவு

இந்தத் தீர்ப்பு, இளைஞர்களின் எழுச்சிமிகு குரலைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குரலை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் கடின உழைப்பிற்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சேவை செய்வதிலும் காங்கிரஸ் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *