திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது யார்? அதிர்ச்சியூட்டும் பின்னணி! | Dindigul: Who mixed excreta into government school’s drinking water tank? shocking backstory!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலக் கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீர்த் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளன.

மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் துண்டு சீட்டில் உள்ள எழுத்துகள் அழிந்த நிலையில் “எங்களுடைய குடியிருப்புகளை அழித்தவர்கள்’ என்ற வாசகங்கள் எழுதியிருந்தது.

இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வரும் நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

குடிநீர்த் தொட்டியில்

குடிநீர்த் தொட்டியில்

இந்த விவகாரம் குறித்து தங்கமாபட்டி மக்கள் நம்மிடையே பேசும்போது, “தற்போது உயர்நிலைப்பள்ளி உள்ள இடத்தில் இதற்கு முன்பு 13 குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாகக் குடியிருந்த வந்தனர். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு வேறு இடம் கொடுக்கபட்ட நிலையில் நான்கு குடும்பங்களுக்கு மட்டும் இடம் கொடுக்கபடாததால் பள்ளிக்கு அருகிலேயே குடியிருந்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *