₹1.34 லட்சத்தில் BSNL-இன் புதிய சாட்டிலைட் போன்! இதை யார் வாங்க முடியும்? என்னென்ன நிபந்தனைகள்? | BSNL introduce new satellite phone cost 1.34 lakhs

Spread the love

இதில் அப்படி என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள்?

BSNL வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த போனில் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன:

மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட வேலை செய்யும் சாட்டிலைட் இணைப்பு.

எந்தவொரு ரிமோட் லொகேஷனில் இருந்தும் வாய்ஸ் கால் பேசும் வசதி.

ஆபத்தான நேரங்களில் உதவி கோர SOS அவசரகால பட்டன்.

சார்ஜ் செய்ய முடியாத இடங்களில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் சக்திவாய்ந்த பேட்டரி.

கடினமான சூழல்களையும் தாங்கும் முரட்டுத்தனமான மற்றும் உறுதியான வடிவமைப்பு.

யாரெல்லாம் இந்த சாட்டிலைட் போனை வாங்கலாம்?

BSNL இந்த போனை சாதாரண வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரவில்லை. மாறாக, யாருக்கெல்லாம் தடையற்ற தொலைத்தொடர்பு மிக அவசியமோ, அவர்கள்தான் இதன் முக்கிய இலக்கு. குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்கள், கடல்சார் பணிகளில் ஈடுபடுபவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர், சுரங்கத் தொழிலாளர்கள், தொலைதூரங்களில் தொழிற்சாலைகளை நிர்வகிப்பவர்கள், புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் மற்றும் அட்வென்ச்சர் பயணம் செய்பவர்கள் போன்றோருக்காகவே இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்

₹1,34,166 என்ற விலையில் கிடைக்கும் இந்த BSNL சாட்டிலைட் போன், ஒரு அத்தியாவசிய தகவல் தொடர்பு கருவியாகவே பார்க்கப்படுகிறது. இதை வாங்க விரும்பும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், முதலில் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) முறையான அனுமதி பெற வேண்டும் என்பது மிக முக்கியமான நிபந்தனை.

உரிய அனுமதியின்றி சாட்டிலைட் போனை வைத்திருப்பதோ அல்லது இயக்குவதோ இந்திய சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெற, அருகிலுள்ள BSNL அலுவலகத்தையோ அல்லது 9768866652 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *