தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பல முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி த.வெ.க முன்னிலை வகிக்கிறது.

திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரவிமோகன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” விஜய் அண்ணா… அதிகாரம் கொடுக்கப்படலாம், ஆனால் மரியாதை என்பது சம்பாதிக்கப்படுவது, நீங்கள் இந்த இரண்டு விஷயங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.