திமுக கூட்டணி இல்லை; தவெக ஆட்சி குறித்த ஸ்டாலின் பேச்சுக்கு சிபிஎம் பெ.சண்முகம் பதில்|’DMK Alliance Is Over’: CPI(M) Fires Back at Stalin

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து தான் கடந்தச் சட்டமனந்த் தேர்தலை சந்தித்தன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்.

தேர்தலுக்குப் பின், தவெகவிற்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், இந்த மூன்று கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தந்தன. பின்னர் தவெக அழைப்பு விடுத்ததன் பேரில், விசிக அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கிறது.

நேற்று திமுக நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின், “தவெக ஆட்சி மூன்று மாதத்தில் கவிழும்’ என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது…

“திமுக கூட்டணி என்கிற ஒன்றே இப்போது இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இப்போது இல்லை.

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் போராடுவோம். இதை இப்போதும் சொல்கிறேன்… எதிர்காலத்திலும் சொல்லுவேன்.

ஏனெனில், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பிரச்னைகளில் யார் குரல் கொடுத்தாலும், யாருடைய ஆதரவைப் பெற வேண்டும் என்றாலும் அதற்கான முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யாராக இருந்தாலும் மூன்று மாதம் கூட இந்த ஆட்சி தாங்காது எனக் கூறுவது தவறு”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *