திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோரை முதல்வர் விஜய் சந்திக்கிறார்  – Kumudam

Spread the love

முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு Z + பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் பெருபான்மை நிரூபிக்க சட்டசபை கூட உள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழக அரசியல் களம் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று வரும் நிலையில், இந்த நிகழ்வு முடிந்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்தில் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. 

இதை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அண்ணாநகர் சென்று  அவரது இல்லத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நேரில் சந்தித்து முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் குழப்பம் நீடிப்பதால் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பை முதல்வர் விஜய் தவிர்த்து இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *