திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Kumudam

Spread the love

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. ஆட்சியில் கட்சி என இரண்டிலும் எ.வ.வேலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது திமுக ஆட்சியை இழந்த போதிலும் தற்போது எ.வ.வேலுக்கு சட்டமன்ற கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. 

வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து சேர்த்ததாகக் கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், 2015-ஆம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டார் இருந்தார். 

2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் (IT Department) தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஆழ்வார்பேட்டை வீடு திருவண்ணாமலையில் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருவது திமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *