இந்த நிகழ்வில் பூர்ணிமா ரவி பேசுகையில், “அண்டர்ரேட்டட் நடிகர் என்று பலரால் கூறப்படும் கதிரின் நடிப்பு இதில் மிரட்டலாக இருக்கும். ‘லிங்கம்’ அவரது கரியரில் மிகப்பெரிய பிரேக் ஏற்படுத்திக் கொடுக்கும். யாரும் அவரை இனி மதிப்பிடத் தேவையில்லை” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய திவ்யா பாரதி, “‘பேச்சுலர்’ படத்தின் மாடர்ன் ஐடி பெண் கதாபாத்திரத்திற்குப் பிறகு, ‘லிங்கம்’ தொடரில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
ரோகிணி என்ற கன்னியாகுமரி பெண்ணாக இதில் வருகிறேன். 90-களில் ஒருவரின் குறைகளையும் ஏற்று வாழும் ஒரு போல்டான பெண்ணின் எமோஷனல் கதை இது. இத்தகைய அழுத்தமான கதாபாத்திரம் எனக்குப் பொருந்தும் என நம்பி, என்னைத் தேர்ந்தெடுத்ததற்குப் பெரிய நன்றி” எனத் தெரிவித்தார்.