இப்படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த நடிகை எஸ்தர் அனில், சமீபத்தில் ‘Ginger Media’ நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில், சுவாரசியமான தகவலைப் பகிர்ந்திருந்தார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு மறக்க முடியாத காவல் நிலையக் காட்சி குறித்துப் பேசிய அவர், “விசாரணையின் போது சகாதேவன் கதாபாத்திரம் ஜார்ஜ்குட்டியை (மோகன்லால்) எட்டி உதைக்கும். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகள் துயரத்துடன் நிற்பதைப் பார்த்து, மோகன்லால் அவர்களைத் திரும்பிப் பார்த்து ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போல ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்துவார்.
அந்த ஒரு நொடி காட்சி மிகவும் உணர்வுபூர்வமானது. அந்தக் காட்சியைத் தெலுங்கு ரீமேக்கில் படமாக்கும்போது, இயக்குநர் ஸ்ரீப்ரியா அம்மா, அதேபோல அடி வாங்கிய பிறகு திரும்பிப் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் என் நடிகர் வெங்கடேஷிடம் கூறினார். ஆனால் அதற்கு வெங்கி மாமா, `அம்மா, என்னால் அப்படி நடிக்க முடியாது… அது மோகன்லால் சாரால் மட்டுமே முடியும்’ என்று வெளிப்படையாகக் கூறினார்.” என்றார்.
திரிஷ்யம் 3-ம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் பேட்டின் குறிப்பிட்ட இந்தப் பகுதி சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. 2026-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘திரிஷ்யம் 3’ உருவெடுத்துள்ளது.