திருச்சி: கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர்; உலா வரும் பரபர வீடியோ | North indian man put reels in trichy collector chair

Spread the love

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்டதா என்பது குறித்து முழு விவரங்கள் குறித்த தகவல் இல்லை.

த.வெ.க அரசு பொறுப்பேற்றது முதல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதனால், இந்த ஆட்சியை “ரீல்ஸ் ஆட்சி’ என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அறைக்குள் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், “திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆட்சியர் அறையில் உள்ள அவரது சேரில் அமர்ந்து வடமாநில இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *