திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய `குப்பை மலை’ – அகற்ற கோரும் மக்கள்!| tirupattur-garbage-heap-national-highway-people-demand-removal

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், பாய்ச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லுத்தரன் திருச்சபைக்கு முன்பு சாலையோரமே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த இடம், குப்பைக் கிடங்கு போலக் காட்சியளிப்பது அந்த வழியாகச் செல்லும் பயணிகளை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தொடர்ந்து குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் இருப்பதாகக் கவலை எழுந்துள்ளது.

இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் நோக்கில் பாச்சல் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து, குப்பைக் குவியல் தொடர்பான பிரச்னையை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

இதையடுத்து, அங்கு குவிந்துள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டு, அந்த இடம் தூய்மைப்படுத்தப்படும் என்றும், இனிமேல் அப்பகுதியில் யாரும் குப்பைகளைக் கொட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கைப் பதாகை வைக்கப்படும் என்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையோரம் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதி மீண்டும் தூய்மையான இடமாக மாற வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *