திருப்பரங்குன்றம்: “தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி”- நயினார் | nainar nagendran about high court judgement on thiruparankundram issue

Spread the love

கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்ததோடு, தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பது திரு. ஜோசப் விஜய் அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சான்றாகும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, தவெக அரசின் இந்து விரோதப் போக்கிற்குக் கிடைத்த தக்க பதிலடி.

நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியிருப்பதையும், நாளை (நவம்பர் 28) மத்தியப் படை (CRPF) பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருப்பதையும், அனைத்துப் பக்தர்களும் தீபமேற்ற அனுமதி அளித்திருப்பதையும் மனதார வரவேற்கிறோம்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்துக்களின் ஆலய மரபுகளையும் வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டுச் சிதைக்கும் திரு. ஜோசப் விஜய்யின் அரசு, தனது இந்து விரோதப் போக்கால் தமிழகத்திற்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான தீர்ப்பைக் கேட்ட பிறகும், முதல்வராக நீடிக்கத் திரு. ஜோசப் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. துளியளவேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால், இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *