திருப்பரங்குன்றம்: வேலி அமைக்கலாம்; தர்காவின் அனைத்து பக்கங்களிலும் விளக்கேற்றங்கள்- உச்ச நீதிமன்றம் | thiruparankundram lamp issue supreme court orders

Spread the love

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படாமல் போன நிலையில், அது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், நாளைய தினம் மலை உச்சியில் தர்கா அருகே இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். மத்தியப் பாதுகாப்புப் படையின் வசம் மலை நிர்வாகத்தைக் கொடுத்திருக்கும் நீதிமன்றம், மாநிலக் காவல்துறை விலக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

“தர்காவைப் பாதுகாப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு முழு சுதந்திரம் உள்ளது; மேலும், தர்காவிற்கு வருகை தரும் நபர்கள் அல்லது பக்தர்கள் தர்காவில் தங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கு எவ்விதத்திலும் இடையூறு செய்யப்படவோ, தடுக்கப்படவோ அல்லது நிறுத்தப்படவோ கூடாது என்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தர்காவின் அனைத்துப் பக்கங்களிலும் குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றும் இடங்களிலும் மற்ற இடங்களிலும் விளக்குகள் ஏற்ற வேண்டும். தர்காவைப் பாதுகாக்கவும், அங்கு வருகை தரும் பக்தர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தர்கா மற்றும் கோயில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக அந்தப் பகுதியில் வேலி அமைக்கலாம்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *