திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணையும், தாயையும் அரிவாளால் வெட்டிய மணமகன் |virudhunagar-kariyapatti-man-attacks-fiancee-kills-mother-in-law-surrenders-police

Spread the love

இதில் பலத்த காயமடைந்த வர்ஷா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி, மகளை காப்பாற்ற முயன்ற போது யுவராஜா அவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், விநாயகஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மல்லாங்கிணறு காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து யுவராஜா, பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதுடன், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக்கொன்ற இந்த சம்பவம் கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *