தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை மணந்தார்.
தனக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணை ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வகை செய்யும் வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம். இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகத் தெரிகிறது.
இந்த மந்திரங்கள், ‘உலகத்தில் உள்ள சகலவிதமான அசையும் – அசையாப் பொருள்களின் சரீரத்தையும், மனதையும் என்னிடம் ஆகர்ஷணம் செய்வாயாக!’ என்றே வேண்டுகின்றன.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ, அவரை முன்னிட்டு ‘கெட்ட பலன்களைத் தரும் கிரக அமைப்பினாலோ, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ காரியங்களாலோ, முன்னோர்கள் எப்போதோ செய்த தவறுகளாலோ, இவருக்கு திருமணம் தடைபடுகிறது.
இந்த நட்சத்திரத்தில், இன்ன ராசியில் பிறந்த இவருக்கு திருமணத் தடை நீங்கி, சுயம்வர பார்வதி – பரமேஸ்வரரின் அருள் பெற்று விரைவாகவும் உசிதமான காலத்திலும் திருமணம் நடைபெற இந்த ஹோமம் செய்கிறேன்’ என்பதே ஆகும்.
இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் விரைவில் கல்யாண வரம் தேடிவரும். இதை வீட்டில் செய்வது மிகவும் கடினம். உரிய வேதியர்களைக் கொண்டே செய்ய வேண்டும். பெரும் பொருட்செலவு பிடிக்கும்.
அப்படிப்பட்ட ஹோமத்தை வாசகர்களுக்காக மதுரை மாநகரில் சக்தி விகடன் நிகழ்த்த இருக்கிறது. இந்த நிகழ்வை மதுரையைச் சேர்ந்த அனுஷத்தின் அனுகிரகம் டிரஸ்ட் இணைந்து வழங்குகிறார்கள். மேலும் தமிழ் மேட்ரிமோனியும் இணைந்து வழங்குகிறார்கள். அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பைச் சேர்ந்த நெல்லை பாலு இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.