Last Updated:
திருவாடானையில் பிரசித்தி பெற்று அமைந்திருக்கும் ஆதிரெத்தினேஷ்வரர் கோவில் வைகாசி விசாகத்திருவிழா மே 21-ம் தேதி கொடியேற்றி துவங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு பிரிசித்தி பெற்று அமைந்திருக்கும் சினேவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் விசாகம் திருவிழா 8 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா மே 21-ம் தேதி கோவிலின் கொடிமரத்தில் கொடியேற்றி துவங்குகிறது. திருவிழா தினமும் சுவாமி – அம்பாள் பல்லக்கு, பூதவாகானம், கைலாச வாகனம், ரிஷப வாகனம், இந்திர வாகனம், யானை, வெள்ளி போன்ற பல்வேறு வாகனத்தில் தினமும் மாலை வீதி உலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 29-ம் தேதி ஆதிரெத்தினேஷ்வரர் பிரியாவிடை பெற்று திருத்தேரிலும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மறுநாள் மே 30-ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Ramanathapuram,Ramanathapuram,Tamil Nadu
