திருவாரூர்:”அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி”- வீடியோ வெளியானதால் சர்ச்சை!-tvk party person birthday celebration om government school

Spread the love

திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டைக்கு இடையில் உள்ள இடும்பானவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் தவெக மாவட்ட துணை செயலாளர் இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் என்பதால் தவெக நிர்வாகிகள் சால்வை போத்தி மாலை அணிவிக்கின்றனர். பின்னர் டூவீலர் சீட்டில் கேக் வைத்து அதனை அகிலன் வெட்டி கட்சியினருக்கு ஊட்டி விடுகிறார். அப்போது அருகில் இருப்பவர்கள் கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசுப்பள்ளி வளாகத்தில் எப்படி பிறந்தநாள் கொண்டாடலாம் என்று கேள்வி எழுப்புவதால் இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

தொடர்ந்து தவெக நிர்வாகிகள் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர தலைமை கட்சியினருக்கு கடிவாளம் போட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள் சமூக மற்றும் அரசியல் பார்வையாளர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *