மாலை வெளியாகும் அப்டேட்; தனுஷ் பாடிய ஓப்பனிங் சாங் – பிறந்தநாள் ஸ்பெஷலாக தனுஷ் கொடுக்கும் ட்ரீட்!

Spread the love

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் இப்போது ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 55வது படமாக உருவாகி வருகிறது. இதில் அவருடன் மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய்பல்லவி எனப் பலரும் நடித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மம்மூட்டி – தனுஷ் தொடர்பான ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை படப்பிடிப்புக்கு பிரேக் விடுகிறார்கள் எனத் தகவல். படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது. அதன் புரொமோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது படத்தின் ஓப்பனிங் பாடல் என்றும், சென்னை ரெட் ஹில்ஸ் அருகே 1500 டான்சர்கள் காம்பினேஷனுடன் இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஓப்பனிங் பாடலை தனுஷ் பாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *