திருவாரூர்: ”அரசு வேலை வாங்கி தருவதாக அன்பில் மகேஸ் பெயரில் மோசடி- அலட்சியத்தால் பறிபோன உயிர்! | government job money scam, one man killed himself

Spread the love

அந்த சமயத்தில் முதல்வர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ரமேஷ்கிருஷ்ணனுக்கு சொத்து பத்து உள்ளது. மருமகன் நகராட்சியில் ஆணையராக இருப்பதாக சொல்கிறார்கள். ரமேஷ்கிருஷ்ணன் சொத்துக்களை பறிமுதல் செய்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் ஒப்படைப்பதற்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவிந்தராஜ்

கோவிந்தராஜ்

நன்னிலம் டி.எஸ்.பி முத்துகுமரனிடன் பேசினோம், “ரமேஷ்கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்.

விசாரணையில், கடந்த ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும், அரியலூரைச் சேர்ந்த சினிமாத்துறையில் இருக்க கூடியவரையும் கைகாட்டியிருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள். இது குறித்து வாளாடி கார்த்தியிடம் விளக்கம் கேட்டோம், “அமைச்சராக இருக்கும் போது பலர் பார்க்க வருவார்கள் யாரையும் தடுத்ததில்லை. எங்களுக்கும் புகாருக்கு உள்ளாகியிருப்பவருக்கும் துளி தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் இதில் எங்கள் பெயரை மிஸ் யூஸ் செய்கிறார்கள். வேலைக்காக பணம் வாங்கிய பழக்கம் எங்களுக்கு இல்லை. இது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *