திருவாரூர்: ”இறந்தவர் உடலை கடித்த எலி”- அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தேறிய அவலம்! | thiruvarur medical college rat bite news shocked

Spread the love

கோவிந்தராஜ் உடலில் முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் எலும்பு தெரியும் அளவிற்கு எலி கடித்திருக்கிறது. இறந்தவரின் உடலை பாதுகாப்பதில் இவ்வளவு அலட்சியமாக அரசு மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ளும் என ஆதங்கத்தில் புலம்பினர். இது குறித்து டாக்டர்கள், பிணவறை ஊழியர்களிடம் முறையிட்டும் முறையாக பதில் சொல்லவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உறவினர்கள் தரப்பில் கூறியதாவது, `கோவிந்தராஜ் உடலை எலி கடித்திருக்கிறது. இது எங்களுக்கு எவ்வளவு பெரிய மனவேதனையை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டனர். பிணைவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டியில் உடல் வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த பெட்டிக்குள் எப்படி எலி வந்து கடித்திருக்கும் என்பதே எங்களுடைய கேள்வி.

உடலை உடனே தந்திருந்தால் இது நடந்திருக்காது. நாங்களும் நிம்மதியாக உடலை அடக்கம் செய்திருப்போம். இனி இது போன்று யாருக்கும் நடக்க கூடாது. எவ்வித அலட்சியமும் காட்டாமல் நிர்வாகம் செயல்பட வேண்டும்” என்றனர். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் இறந்தவரின் உறவினர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *