திருவாரூர்: ”பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொள்ள வேண்டும்” – ஜி.கே.வாசன் ஆவேசம் | Thiruvarur: “Those who commit sexual crimes should be shot dead” – G.K. Vasan speaks out vehemently.

Spread the love

சமீப நாள்களாக குழந்தைகளை வெளியிலே விடுவதற்குக் கூட பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்திற்கும் பயத்திற்கும் காரணம் கஞ்சா போதை பொருள்கள். சென்னையில் மட்டும் 24 மணி நேரத்திலே 12 குற்றங்கள் நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சி என்ற முறையிலே அரசைக் குறை கூற விரும்பவில்லை. தப்புக்கள் நடக்கின்றன என்று தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கூறுகின்றன நானும் கூறுகிறேன். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசுதான். இது போன்ற தவறான செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

அரசு இதில் உரிய தனி கவனம் செலுத்தி முற்றுப்புள்ளி வைப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களை நேரடியாகப் பார்த்தால் சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது. அதில் மாற்று கருத்தே இருக்க கூடாது. அவர்களுக்கு யாரும் வாதாடக் கூடாது.

மிருகத்தனமான செயலிலே ஈடுபடும் போது வேறு வழி இல்லை. மூன்று வயது பச்சிளம் குழந்தையை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. இது போன்ற நிலை இருக்கவே கூடாது. இந்த நிலைக்குக் காரணம் தனிமனித ஒழுக்கம்தான். தனிமனித ஒழுக்கம் கெடுவதற்குக் காரணம் போதைப்பொருள் மற்றும் குடி. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயகத்தில தனி மனிதர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. இந்தக் கட்சியில இருந்து அந்தக் கட்சிக்குப் போகலாம் அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்குப் போகலாம். தேர்தலுக்கு முன்பு ஒரு கட்சியில் இருந்து எதிர்த்து வேலை செய்யலாம். தேர்தலுக்குப் பிறகு ஆட்சியாளர்கள் இருக்கின்ற இடத்திற்குப் போய் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்.

இதை தினம்தோறும் எல்லாக் கட்சிகளும் சந்திப்பதைப் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்தியா பொருளாதார ரீதியாக உயர வேண்டும். பொருட்களுடைய விலை குறைய வேண்டும், மக்கள் சந்தோஷமாக இருக்க நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *