‘தி ஒடிஸி’ படம் குறித்துப் பேசிய கிறிஸ்டோபர் நோலன்! |Christopher Nolan Spills Details on ‘The Odyssey’ Ahead of Release

Spread the love

அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர், ” ‘தி ஒடிஸி’ என்பது சாகசப் பயணம். இவ்வளவு பெரிய பிரமாண்டமான கதையைத் திரையில் கொண்டுவரும்போது, ரசிகர்களை ஒரு த்ரில்லான சவாரிக்கு அழைத்துச் செல்லவே நாம் விரும்புவோம். ஆனால், அடிப்படையில் இது ஓர் அழுத்தமான காதல் கதை. இந்த பிரமாண்டமான சாகசங்களுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பின்னால் இருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்கள் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், அந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான மதிப்பு இன்னும் கூடும்.

Christopher Nolan - The Odyssey

Christopher Nolan – The Odyssey

ஆறு நாடுகளில், 90 நாள்களாக, சுமார் 20 லட்சம் அடி நீளமுள்ள ஐமேக்ஸ் (IMAX) ஃபிலிம் ரோல்களைப் பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டையும் துண்டு துண்டாகத்தான் எடுப்போம். படம் சிறியதோ பெரியதோ, எந்த அளவிலான திரைப்படமாக இருந்தாலும் சரி, அதன் படப்பிடிப்பின்போது நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சவாலான, அழுத்தமான தருணங்கள் வரத்தான் செய்யும். அது எல்லா படங்களுக்கும் பொதுவான ஒன்றுதான்” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *