MCX தங்க வர்த்தகம் செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்|

Spread the love

பேரிடர், சூப்பர் எல் நினோ மாதிரியான காலநிலை மாற்றங்கள்கூட, தங்கம் விலையை பாதிக்கும். மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதும், விற்பதும்கூட, தங்கம் விலையில் முக்கிய பங்காற்றும்.

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களுமே தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதனால், அந்தத் தகவல்களை, செய்திகளை உள்வாங்கி தங்கம் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.

சில உதாரணங்களைப் பார்க்கலாம்… மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் போது, தங்கம் விலை அதிகரிக்கும்.

ஏனெனில், உலகத்தில் குறிப்பிட்ட அளவு தங்கம் இருப்பு தான் இருக்கிறது. உலக வங்கிகள் டன் கணக்கில் தங்கம் வாங்குவார்கள். அப்போது தங்கம் விலை தானாக உயரும் அல்லவா?

மத்திய வங்கிகள் வட்டி விகிதங்கள் உயர்த்தும் போது, தங்கம் விலை பொதுவாக குறையும்.

இப்படித்தான் தரவுகளையும், செய்திகளையும் வைத்து தங்கம் வர்த்தகத்தில் வாங்குவதா… விற்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *