முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கியும் நலிவடைந்த குடும்ப பெண்மணிகளுக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.
அதன் பின் விழாவில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, “ நம்முடைய ஆட்சியில் நமது தலைவர் மக்களுக்காகப் பல திட்டங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதும் நினைப்பதும், பிரயோஜனம் இல்லை. மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடத்திற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி.”

இதைக் கேட்டவுடன் மேடைக்குக் கீழே இருந்த திமுக தொண்டர்கள் கைதட்டினர். அதற்கு, “ஆமா… தோற்று போனதற்கு கைதட்டுங்கள்! அதனால்தான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். தி.மு.க நாசமாக போனதுக்குக் காரணமே தி.மு.க-காரன்தான்.
பேரன், பேத்தி சொன்னான் என ஓட்டு போட்டதால், இந்த நிலைமை. இனிமேல் மக்களுக்குச் செய்த நன்மைகளைப் பேசி வாக்கு கேட்கத் தேவையில்லை
மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், நல்லது செய்து ஓட்டுப் போடுவதை விட, நீங்கள் ஒரு முடிவை எடுத்து ஓட்டுப் போட்டுள்ளீர்கள்.