Train: “கடந்த 6 வருஷத்துல அவர் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்” – இயக்குநர் ராம்| “He has faced countless betrayals and disappointments over past six years” – Director Ram.

Spread the love

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராம், “”சைக்கோ’ (2020) திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் மிஷ்கினின் ஒரு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது.

Train டீசர் வெளியீடு

Train டீசர் வெளியீடு

இந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் அவர் ‘பிசாசு 2’, ‘ட்ரெயின்’ என இரண்டு படங்களை எடுத்து முடித்துள்ளார். மற்றொரு படம் பாதியிலேயே நிற்கிறது. ஒரு ஃபிலிம் மேக்கராக இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு படத்தை திரைக்குக் கொண்டு வர அவர் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள், அவதூறுகள் மற்றும் பலிச்சொற்கள் ஏராளம்.

இத்தனை வலிகளையும் அவமானங்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் எந்தவொரு மனிதனும் காணாமல் போயிருப்பான். ஆனால், மிஷ்கின் இதையெல்லாம் தன் இடது கையால் தள்ளிவிட்டு நிமிர்கிறார் என்றால், அதற்கு மனிதர்கள் மீது அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம். இவ்வளவு காயங்களுக்குப் பிறகும் மனிதர்களை நேசிக்கும் அவரது குணம்தான் அவரை இன்றுவரை சினிமா உலகில் தக்க வைத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *