“துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது… திமுக தனித்தே போராடும்” – ஆர்.எஸ் பாரதி காட்டம்!| “Cannot work with a treacherous organization… DMK will fight alone” – R.S. Bharathi lashes out!

Spread the love

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய திமுக, தனித்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தேர்தல் ஆணையரை எதிர்த்து டெல்லியில் இந்தியாக் கூட்டணியின் போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க தனது நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளது.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

உச்ச நீதிமன்றத்தில் இதற்காக தி.மு.க தனியாகவே வழக்குகளைத் தொடர்ந்து வாதாடி வருகிறது. காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சேர்ந்து தி.மு.க எந்த வேலையையும் செய்யாது என்பதில் உறுதியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியை ஒரு துரோக அமைப்பாகக் கருதுவதால், அவர்களுடன் இணைந்து செயல்பட முடியாது. தவெக இந்திய கூட்டணியில் இணைந்ததால் திமுக தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்று மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

நாளுக்கு நாள் மாறிப் பேசும் அவரது பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் முடிவடைந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவைப் பொறுத்தவரை, தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *