
துலாம் ராசி பலன்கள்:
சனிபகவாள்உங்க ராசிக்கு ஆறாமிடமான சத்ரு, ருண, ரோக ஸ்தானத்துல வக்ரம் அடையறார்ங்க. இந்த அமைப்பு கடன்கள் அடைபடக்கூடியதும், நாள்பட்ட நோய்களின் வீரியம் குறையக் கூடியதுமான நல்ல காலகட்டமாகவே இருக்கும்க அதேசமயம் மறைமுக எதிரிகளிடம் கவனமா இருக்கணும்க
பணியிடத்துல பட்ட கஷ்டங்கள் பனிபோல விலகும்க அலைச்சலே வாழ்க்கை யாக இருந்த அவதி நிலைமை மாறும்க மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையில் சிலர் சிண்டு முடித்திருந்த நிலை மாறி உங்க திறமை பேசப்படும்க உயரதிகாரிகளால் பாராட்டப்பட்டு, பதவி பெருமை உயரும்சு. பதவி, ஊதிய உயர்வுகள் கிடைக்கும்சு. புறம்பேசும் நபர்களிடம் இருந்து உடனடியா விலகிடுங்க
மனையில மகிழ்ச்சி மலரும்க பெற்றோர் பெரியோர் ஆசி ஆனந்தம் அளிக்கும்சு. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க இளம் வயதினர் வாழ்க்கைல மனம்போல சுபகாரியங்கள். திடீர்னு கைகூடி, நிம்மதி தரும்க வாரிசுகள் வாழ்க்கைல வசந்தம் வீசும்க உங்க வாக்குக்கு செல்வாக்கு உயரும்க உறவுகளை மட்டம்தட்டிப் பேசினா உங்க நிலை தரைமட்டம் ஆகிடலாம் புரிஞ்சுக்குங்க.
நீண்டகாலம் முடங்கிக்கிடந்த வர்த்தகம் கூட இப்போ முழுவீச்சுல லாபம் தர ஆரம்பிக்கும்க வெளிநாட்டு வர்த்தகம் புதிய ஒப்பந்தங்கள் மூலம் செழிப்பாகும்க. அரசு வழியில் எதிர்பார்த்த தொழில் அனுமதி, உதவித்தொகைகள் கிட்டுக
அரசு, அரசியல் துறையினர்க்கு ஆதரவு அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. சிலருக்கு கூடுதல் பொறுப்பும் பதவியும் தேடிவரும்க. இந்த சமயத்துல உடனிருந்தே உபத்திரவம் செய்யும் நட்புகளை அடையாளம் கண்டு விலக்கறது அவசியம்க
மாணவர்கள் பாராட்டும், பெருமையும் பெறக்கூடிய காலகட்டம்க, அதிகாலைப் படிப்பு, அதீத நன்மை தரும்க. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரக்கூடிய காலகட்டம்க எந்த சமயத்திலும் வறட்டு கௌரவமும். வாக்குவாதமும் கூடாதுங்க
பெண்கள். திடீர் யோகத்தால பல நன்மைகளைப் பெறலாம்க. இளம் வயதினருக்கு பெற்றோர் பெரியோர் ஆசி கிடைக்கும்க உடல்நலத்துல ஏற்கெனவே இருந்த பிரச்னைகள் படிப்படியாக தீரும்க பணவரவு அதிகரிக்கும்போது சேமிப்பை உயர்த்திக்கறது புத்திசாலித்தனம்க. எந்த சந்தர்ப்பத்திலும் அதீத கோபமோ, வாக்குல கடுமையோ வேண்டாம்க வாரிசுகளை அன்பால வழிநடத்துங்க. வீண் உணர்ச்சிவசப்படலைத் தவிர்த்தா, விசேஷ நன்மைகள் தொடரும்க
பயணங்கள்ல வேகம் வேண்டாம்க வழிபாதையில் வளர்ப்புப் பிராணிகளிடம் நெருக்கம் தவிருங்க. அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க
வெள்ளிக் கிழமைகள்ல ரங்கநாதரைக் கும்பிடுங்க.முடிஞ்ச திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாபரை வணங்கிட்டு வாங்க. வழ்க்கை ஆனந்தமயமாகும்.