இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி சீனு என்பவர் உப்பளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் கபில்தேவ் முதல் குற்றவாளியாக சேர்கப்பட்டார். இதனால் சீனுவின் நண்பரான ஜப்பான் அஜித் என்பவருக்கும் கபில்தேவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இருவரும் தனித்தனி கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். அஜித் கும்பலை பழிவாங்க கபில்தேவ் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. அஜித்குமார் மீது 8 வழக்குகளும், கபில்தேவ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைபதுக்கி வைத்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.