தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; அமித்ஷா கடுப்பான பின்னணி என்ன ?

Spread the love

அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பெரிய காவிக்கொடி ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்தார். கொடி வந்துவிட்டது என்று அதைக் கையில் வாங்கிய அமித்ஷா, அது காவிக்கொடி என்று தெரிந்ததும் டென்ஷனானார். தொடர்ந்து, `தேசியக் கொடியைக் கொடுங்கள்’ என்று அவர் கடுகடுக்க, ஓடிச் சென்று தேசியக் கொடியை எடுத்து வந்து கொடுத்தார் நமச்சிவாயம்.

காங்கிரஸ் கட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், 2021 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவர். அதேபோல இவருக்கு உள்துறை பதவியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதல்வர் ரங்கசாமி அனுப்பிய இலாகாப் பட்டியலை ஆளுநர் நிறுத்தி வைத்து தாமதப்படுத்தியதாக என்.ஆர்.காங்கிரஸார் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *