‘தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் இணையுமா?’ – அஜித் பவார் மனைவியின் மழுப்பல் பதில் என்ன? | ‘Will two factions of NCP reunite?’ – What response from Ajit Pawar’s wife

Spread the love

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. அஜித்பவார் தலைமையில் ஓர் அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஓர் அணியும் செயல்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித்பவார் விமான விபத்தில் இறந்துவிட்ட நிலையில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் வேலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித்பவார் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா பவார் இன்றி மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து இது குறித்து பேசியுள்ளனர்.

இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரை அஜித்பவாரின் மகன் பார்த் பவார் இரு முறை சந்தித்து இணைப்பு குறித்து பேசி இருக்கிறார். இதனால் இரு கட்சிகளும் விரைவில் ஒன்றாக இணையும் என்று பேச்சுவார்த்தை அடிபடுகிறது. இது குறித்து இன்று சுனேத்ரா பவாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

சரத்பவார்

சரத்பவார்

சுனேத்ரா பவார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நிருபர்களைச் சந்தித்தபோது ஒரு நிருபர், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக இணையுமா என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சுனேத்ரா பவார், “‘மக்கள் இதில்(கட்சி இணைப்பு) அதிக ஆர்வம் காட்டுவது எனக்கு தெரியும். நேரம் வரும்போது இது தெளிவாகும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

அஜித்பவார் மகன் பார்த் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் செயல்தலைவர் பிரபுல் பட்டேல் ஆகியோர் சரத்பவாரைச் சந்தித்து பேசியது அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்குத்தான் என்று தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அஜித்பவார் கட்சியின் முத்த தலைவர் சுனில் தட்கரே இரு அணிகளின் இணைப்பு குறித்து கூறுகையில், ”அஜித்பவார் உயிரோடு இருந்தபோது இரு அணிகளையும் ஒன்றாகக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். இணைப்பு குறித்த விவாதங்கள் நடந்ததாகவும், அஜித் பவார் அது குறித்து தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறு பற்றிய பேச்சுவார்த்தை சமீபகாலமாக நடந்து வருகிறது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவாரும் இதனை ஆதரித்தார். ஆனால் அஜித்பவார் இறந்து போனதால் இணைப்பு முயற்சி தடைபட்டது”என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *