” ‘நேச்சுரலாக நடிக்கிறீங்க’னு சூர்யா சார் பாராட்டினார்!” – ‘நக்கலைட்ஸ்’ திலகவதி பேட்டி |sceen-movie-actress-thilagavathi-interview-about-suriya-and-nakkalites

Spread the love

சூர்யாவின் “சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களைத் தாண்டி இன்னும் சில சோஷியல் மீடியா பிரபலங்கள் படத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

அவர்களில் ‘நக்கலைட்ஸ்’ திலகவதியும் ஒருவர். ‘சீன்’ படத்தில் ‘மாமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கோவையில் இருக்கும் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர்தான். அடிப்படையில் ஒரு விளம்பர ஏஜென்சியில் கிராஃபிக் டிசைனராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீடியாத்துறையில் ஆஃப்-ஸ்கிரீனில் பணியாற்றலாம் என்ற எண்ணத்தில்தான் ‘நக்கலைட்ஸ்’ சேனலை அப்ரோச் செய்தேன். ஆனால், அங்குள்ளவர்கள் என்னை ஆன்-ஸ்கிரீனில் பெர்ஃபார்ம் செய்து பார்க்கச் சொன்னார்கள்.

அங்கு நடித்த பிறகுதான் எனக்கு நடிப்பின் அடிப்படை விஷயங்களே தெரியவந்தன. நடிப்புக்கான எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நக்கலைட்ஸில்தான் படித்தேன்.

ஆபீஸில் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்டு நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் வேலைக்குப் போவேன். அப்படித்தான் என் நடிப்புப் பயணம் தொடங்கியது” என்றவர் தொடர்ந்து, “எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் பெரியளவில் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *