தேனி மாவட்டம், தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில் : பித்ரு தோஷம் தீரும்… பொருளாதாரம் சிறக்கும்! | thamaraikulam alagumalaiyan temple

Spread the love

இந்த இரண்டு விழாக்களின்போதும் இவ்வூர் மக்கள் தாங்கள் எந்த ஊரில் வசித்தாலும் தாமரைக்குளத்துக்கு வந்துவிடுவார்கள். அன்னதானம், விழாக் கொண்டாட்டம் என்று ஊரே களைகட்டும். மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நேர்ந்து கொண்டு, சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாத அன்பர்களும் அழகுமலையான் ஆலயத்தில் அந்தப் பிரார்த்தனைகளைச் செய்வது உண்டு.

புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி தனுர் மாத பூஜை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது அலங்காரப் பிரியனான அழகுமலையானுக்குப் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். சுவாமிக்குத் தாமரை மலர்கள் படைத்து, விளக்கு ஏற்றி, பாலபிஷேகம் செய்து வழிபட் டால் தங்களின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில் கருப்பண்ணசாமி

தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில் கருப்பண்ணசாமி

அதேபோல், தாமரைத் தண்டில் திரி எடுத்து, அதைக்கொண்டு இந்தப் பெருமாளுக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதால் பித்ருதோஷம், முன்னோர் கோபம் ஆகியவை நீங்கும் என்கிறார்கள்.

மட்டுமன்றி மனச்சங்கடங்கள், குடும்பத்தில் பிரச்னை, பொருளா தாரத்தில் சிக்கல் – கடன் பிரச்னைகள் போன்றவை விலகவும், நீண்ட நாட்களாக தடைபட்டிக்கும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் விரைவில் நடக்கவும், குழந்தைப்பேறு வாய்க்கவும், ஆரோக்கியம் வேண்ட்யும், தொழில் சிறக்கவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்து அழகுமலையானை வழிபடுகிறார்கள்.

அழகுமலையானும் தன்னைநாடி வந்து வணங்கி வழிபடும் அவர்களின் இன்னல்களைக் களைந்து இன்பவாழ்வை வரமாக அருள்கிறார். இதற்கு, அனுதினமும் அவரின் சந்நிதிக்கு வரும் பக்தர்கள் கூட்டமே சாட்சி என்கிறார்கள் உள்ளூர் மக்கள். நீங்களும் ஒருமுறை குடும்பத்தோடு சென்று அழகுமலையானை வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *