நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விவகாரம் இதுதான்.
தவெக தலைமையிலான அரசு அமைவதைத் தடுக்க இப்படியொரு முயற்சி எடுக்கப்பட்டதாகப் பேசப்பட்டது.
திமுக – அதிமுக தலைமைகள் இது தொடர்பாக விரிவான விளக்கம் எதையும் தராத நிலையில், இன்னமும்கூட விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், “இதிலென்னங்க ஆச்சர்யம், ஏற்கெனவே பல மாவட்டங்களில் திமுக அதிமுக கூட்டணி இருக்கத்தானே செய்யுது. எங்க மாவட்டத்தை எடுத்துக்கோங்க, மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுக-வின் சண்முகநாதனும் பிசினஸ் பார்ட்னர்ஸ். நடந்து முடிந்த தேர்தல்ல ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஜெயிக்க அவ்வளவு பாடுபட்டாங்க. அதுல அனிதா ஜெயிச்சிட்டார். பாவம் சண்முகநாதன் தவெக வேட்பாளர்கிட்ட தோத்துட்டார். ஆனா ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து தேர்தல் வேலை பார்த்தது நிஜம். இவங்க நட்பு இப்படியே போனா அது திமுக-வுக்கு நல்லதில்லை”னுதான் இப்ப ‘அனிதாவை மாத்தணும்’னு தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கேன்” என்கிறார், திமுக-வின் தலைமைப் பொதுக்குழு உறூப்பினரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான காவல்காடு எஸ்.சொர்ணகுமார்.