தேர்தல் ஆணையத்தில் 14 முறை எதிர்ப்பு? ராகுல் காந்தியின் கடும் குற்றச்சாட்டு|ECI Rift Report: Rahul Gandhi Launches Fresh Attack

Spread the love

இந்தக் கேள்விகளுக்கு நேற்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், “கருத்து வேறுபாடுகள் எந்தவொரு அமைப்பிலும் இயல்பே.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திர அமைப்பு. ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் 2023-ம் ஆண்டின் சட்ட நடைமுறைகளின்படியே எடுக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் குளறுபடிகள் நடக்கின்றன… வாக்குத் திருட்டுகள் நடக்கின்றன… எஸ்.ஐ.ஆரில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் வெடித்துள்ள பிரச்னை குறித்து ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

நீங்கள் செய்துகொண்டிருப்பது முற்றிலும் தவறானது. இது தேசத் துரோகம். நாட்டிற்கு எதிரானது. காலம் வரும்போது நாங்கள் உங்களைப் பிடிப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் தப்பவே முடியாது” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவிற்குக் கேப்ஷனாக, “வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றமாகும். அது நமது அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்.

இதை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன. நீதி நிச்சயம் வழங்கப்படும்” என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *