"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

Spread the love

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பத் திரும்பக் கூறி வருவது ஒன்றே – “ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன்” என்பதுதான்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) கூட, நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திலும் இதைத்தான் கூறியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஐ.நாவில் ட்ரம்ப் பேச்சு

அவர் அங்கே, “நான் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர்கள் மீண்டும் தங்களைச் சீரமைத்துக்கொண்டு, மத்திய கிழக்கிலோ… ஏன் உலகிலேயே கூட மிகச் சிறந்த ஒரு நாடாக உருவெடுக்க வழிவகுப்பதா?

அல்லது ஈரானிய இஸ்லாமியக் குடியரசை உடனடியாக அழித்து, இனி யாரையாவதையோ அல்லது நாட்டையோ அவர்கள் கொல்வதற்கும் அழிப்பதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பே இல்லாதவாறு செய்வதா?” என்று பேசியிருந்தார்.

ஈரான் கலாய்

ட்ரம்பின் இந்தப் பேச்சைக் கலாய்க்கும் விதமாக, ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் “ட்ரம்ப், ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவதாகப் பேசுகிறார்.

ஆனால் ஈரான் அவ்வளவு பாதுகாப்பில்லாத நாடு அல்ல என்பது அவருக்கும் தெரியும்.

ஏனெனில், சமீபகாலமாக அவர்கள் ஹாலிவுட்டுக்குப் பதிலாக பாலிவுட் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்தியதிலிருந்தே…” என்கிற கேப்ஷனோடு தெலுங்கு நடிகர் பாலய்யா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் வீடியோ கிளிப்பை ஷேர் செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *