“தேர்தல் முடிவுகளைக் கடந்த கழக உணர்வே நம் வலிமை” – ஸ்டாலின்| “Party spirit that transcends election results is our strength.” — Stalin

Spread the love

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், உடன்பிறப்புகள் தங்கள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன். திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தபோதும் உடன்பிறப்புகளின் உணர்வைக் கண்டேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்த கழக உணர்வே நம் வலிமை.

திமுக - ஸ்டாலின்

திமுக – ஸ்டாலின்

வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த மகத்தான தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தேர்தல் களத்தில் பெறாத வெற்றியுமல்ல, அடையாத தோல்வியுமல்ல. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அவரது பயணமும் கழகத்தின் பயணமும் ஓய்வதேயில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *