“தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கும்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொகுதி மறுவரையறை மசோதா அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்த ஆண்டு நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வரையறை செய்யக் கூடாது. குறைகளைச் சரிசெய்தால் சரியாகிவிடும். தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 117 தொகுதிகள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு பெண்கள் வருவார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு பெண்கள் செல்வார்கள். இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.