இருந்தும் தற்போதும் பாஜக இந்தத் தொகுதி மறுவரையறையை இந்தக் கூட்டத்தொடரில் அமல்படுத்திவிட முயல்கிறது.
பாஜக-வின் இந்தத் தைரியத்திற்குக் காரணம், சமீபத்தில் இந்திய மாநிலங்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள்.
மேற்கு வங்கம்: கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது.
இதனால், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது அந்தக் கட்சிக்குள்ளேயே பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.
இதில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 20 மக்களவை எம்.பி-க்கள் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை எம்.பிக்கள் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு: தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை, தொகுதி மறுவரையறை மசோதாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது திமுக.
‘திமுக – பாஜக கூட்டணி’ என்கிற பேச்சுகள் அடிப்படும் இந்த வேளையில், ‘மசோதா தாக்கலானதும் அதைப் படித்துவிட்டு முடிவை எடுப்போம்’ என்கிற நிலைபாட்டை எடுத்துள்ளது திமுக.