பிக் பாஸ் தமிழ் காமன் மேன் 10: ஆகஸ்ட் 16 முதல் தொடக்கம் – நடுவர்கள் யார்? |Bigg Boss Tamil Common Man Season 10: Premiere Date, Judges & Details

Spread the love

இந்த நிகழ்ச்சி குறித்து ஆரி அர்ஜுனன், “பிக்பாஸ் என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு மேடை. இந்த சீசனில் வெறும் முகமூடி அணிந்த நபர்களை நாங்கள் தேடவில்லை; உண்மையான, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட நபர்களையே தேடுகிறோம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் போலியான எந்தவொரு பிம்பமும் நீண்ட காலம் நிலைக்காது. நேர்மையும் தன்னம்பிக்கையுமே ஒருவரை இறுதிவரை கொண்டு செல்லும்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

Bigg Boss - The Common Man

Bigg Boss – The Common Man

தொடர்ந்து பேசிய ராஜு ஜெயமோகன், “நாம் நாமாக இருப்பதே போதுமானது என்பதைத்தான் பிக்பாஸ் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

பல வருடங்களாக இந்த வாய்ப்பிற்காகக் காத்திருந்த சாமானியர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் தனித்துவமான ஆற்றல் மக்களை நிச்சயமாகக் கவரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஓவியா பேசுகையில், “மக்களுடன் எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை இந்த சீசன் சாமானிய மக்களுக்குக் கொடுக்கப்போகிறது.

தயக்கமில்லாத, இயல்பான, உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர்களையே மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *