மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி | Dubai – Tel Aviv flight: Who is oman pilot? he is religious extermeist and avoided women, details here

Spread the love

International

oi-Nantha Kumar R

டெல்அவிவ்: துபாய் – டெல்அவிவ் விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கிவிட்டு விமானத்தை கடத்த 180 பேரையும் கொல்ல முயன்றதாக ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுதொடர்பான விவரங்கள் ரகசியம் காக்கப்படடு வரும் நிலையில் அந்த துணை விமானியின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு விமான சேவைகள் உள்ளன. நேற்றைய தினம் ‘ஃப்ளைதுபாய்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான FZ1073 என்ற விமானம் துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்கு புறப்பட்டது.

tel aviv flight

இந்த விமானத்தை மும்பையை சேர்ந்த ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் ஆகியோர் இயக்கினர். இதில் ஸ்மித் மச்சார் கேப்டனாகவும், ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் துணை விமானியாகவும் பணியாற்றினார்.

வானில் விமானம் பறந்த போது ஓமன் நாட்டு துணை விமானி, இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு விமானத்தை கடத்தி தரையில் மோதி வெடிக்க வைத்து அனைவரையும் கொல்ல முயன்றார். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த பயணிகள் காக்பிட்டை திறந்து அந்த விமானியை சிறைபிடித்தனர்.

இதையடுத்து பணி முடித்து விமானத்தில் இருந்த 2 விமானிகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதனால் விமானத்தில் பயணித்த 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என்று மொத்தம் 180 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். கத்திக்குத்து காயமடைந்த இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு சவுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை கடந்துவிட்டார்.

ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி விமானத்தை கடத்தி வெடிக்க செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஓமன் விமானியின் பின்னணி குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி பலரும் தேடத்தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் ஓமன் துணை விமானி பற்றிய முக்கிய தகவலை ‘ப்ளைதுபாய்’ விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் சக விமானி வெளிப்படுத்தி உள்ளார். இஸ்ரேல் நாட்டின் சேனல் 16 என்ற செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளதாவது:

”விமானத்தை ஓட்டி சென்ற ஓமன் துணை விமானி மதஅடிப்படைவாதி. மத நம்பிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். நாள் முழுவதும் இறைவழிப்பாட்டில் ஈடுபட்டு கொண்டே இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பெண்களிடம் கூட கை குலுக்கமாட்டார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் ‘ஃப்ளைதுபாய்’ விமான நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார்.” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *