பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மீனா மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருப்பார்.
தமிழ், இந்தி போன்ற மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் பாகமும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாம் பாகமான ‘த்ரிஷ்யம் 3’ வெளியாகி இருக்கிறது. மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர், அனில், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வெளியான முதல் நாளே இப்படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் மோகன்லால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.