நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! இன்று திடீரென உயர்ந்த தங்கம் விலை ! – Kumudam

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில், நேற்று மேலும் ரூ.680 வரை சரிவு ஏற்பட்டது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை எவ்வளவு?

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை :

வெள்ளி விலையை பொறுத்தவரை தொடர்ந்து 5-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நகை வாங்குவோர் கவனம் :

தங்கம் விலையில் தொடர்ந்து சிறிய அளவிலான மாற்றங்கள் காணப்பட்டு வரும் நிலையில், நகை வாங்க திட்டமிடுபவர்கள் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வருவது அவசியமாக உள்ளது. சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மேலும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *