நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை கடும் உயர்வு! – Kumudam

Spread the love

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக சரிவைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே பெரும் தத்தளிப்பு நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து, மாலையில் ரூ.1,360 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக ஒரே நாளில் இருமுறை விலை மாறியது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த தங்கம், மாலை நேரத்தில் சட்டென ரூ.1,200 உயர்ந்தது. இதன் காரணமாக, நேற்று மாலை முடிவில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அடுத்தடுத்த விலை உயர்வின் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,200 அதிரடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,07,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல், கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே இன்று வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,50,000 லட்சம் ஆகவும் அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *